அரசு அலுவலகமாக மாறுகிறது டில்லி ஜன்பத் ஓட்டல்

தினமலர்  தினமலர்
அரசு அலுவலகமாக மாறுகிறது டில்லி ஜன்பத் ஓட்டல்

புதுடில்லி : டில்­லி­யில் உள்ள, ஜன்­பத் ஓட்­டலை மூட­வும், அதை, அரசு அலு­வ­ல­க­மாக பயன்­ப­டுத்­த­வும், மத்­திய அமைச்­ச­ரவை கொள்­கை­ய­ள­வில் ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

இந்­திய சுற்­றுலா வளர்ச்சி கழ­கத்­துக்கு, பல மாநி­லங்­களில், சொந்­த­மாக ஓட்­டல்­கள் உள்ளன. லாப­க­ர­மாக செயல்­ப­டாத ஓட்­டல்­களை, தனி­யா­ருக்கு குத்­த­கைக்கு விடு­தல், பங்­கு­களை விற்று வெளி­யே­று­தல் உள்­ளிட்ட, பல முடி­வு­களை மத்­திய அரசு எடுத்து வரு­கிறது. அதன்­படி, முதற்­கட்­ட­மாக, போபா­லில் உள்ள, ஓட்­டல் லேக் வியூ அசோக்; கவு­காத்­தி­யில் உள்ள, ஓட்­டல் பிரம்­ம­புத்ரா அசோக், பரத்­பூரில் உள்ள, ஓட்­டல் அசோக் ஆகிய மூன்று ஓட்­டல்­களின் பங்­கு­களை விற்று அதி­லி­ருந்து வெளி­யேற, மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது. தற்­போது, ஜன்­பத் ஓட்­டலை மூடும் முடிவை அரசு எடுத்­துள்­ளது.

இது குறித்து, சுற்­றுலா துறை அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: டில்­லி­யின் மைய பகு­தி­யில், ஜன்­பத் ஓட்­டல் அமைந்­துள்­ளது. அதை, அரசு அலு­வ­லக கட்­ட­ட­மாக மாற்ற முடிவு செய்­யப்­பட்­டது. இதன் மூலம், வாடகை கட்­ட­டங்­களில் செயல்­படும், அரசு அலு­வ­ல­கங்­களின் செலவு குறை­யும். இதற்­காக, ஜன்­பத் ஓட்­ட­லின் சொத்­து­களை, மத்­திய நகர்ப்­புற வளர்ச்சி துறைக்கு மாற்ற, மத்­திய அமைச்­ச­ரவை, கொள்கை அள­வி­லான ஒப்­பு­தலை வழங்­கி­யுள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை