கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

தினமலர்  தினமலர்
கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

புதுடில்லி : கிரா­மங்­களில் வசிக்­கும் இளை­ஞர்­க­ளுக்கு, திறன் மேம்­பாட்டு பயிற்சி வழங்­கும் திட்­டத்தை, மத்­திய தொலை தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா துவக்கி வைத்­தார். அத்­திட்­டத்­துக்கு, தீன்­த­யாள் உபாத்­யா­யா­வின் பெயர் வைக்­கப்­பட்டு உள்­ளது.

இது குறித்து, அமைச்­சர் மனோஜ் சின்ஹா கூறி­ய­தா­வது: கிரா­மங்­களில் வசிக்­கும் இளை­ஞர்­க­ளுக்கு, தொலை தொடர்பு சாத­னங்­களை கையா­ளும் வகை­யில், திறன் மேம்­பாட்டு பயிற்சி வழங்­கப்­பட உள்­ளது. மொபைல் போன் கோபு­ரங்­களை பரா­ம­ரிப்­பது, பழுது சரி­செய்­வது, ‘ஆப்­டி­கல் பைபர்’ பொருத்­து­வது உள்­ளிட்­டவை தொடர்­பாக பயிற்­சி­கள் வழங்­கப்­படும்.

முதற்­கட்­ட­மாக, சோதனை முறை­யில், பீஹார், ஒடிசா, பஞ்­சாப், ஹரி­யானா, உ.பி., ஆகிய மாநி­லங்­களில், 10 கிரா­மங்­களில், 10 ஆயி­ரம் பேருக்கு பயிற்சி வழங்க திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது. இதற்­காக, ஏழு கோடி ரூபாய் செலவு செய்­யப்­படும். இதை தொடர்ந்து, நாடு முழு­வ­தும், பயிற்சி திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­படும். இதன் மூலம், கிரா­மங்­களில் வசிக்­கும் இளை­ஞர்­கள், திறன்­மிக்­க­வர்­க­ளாக மாறு­வர். மத்­திய அரசு, அனைத்து மக்­க­ளுக்­கும், இணை­ய­தள சேவை கிடைக்க திட்­ட­மிட்டு உள்­ளது. 2018 டிசம்­ப­ருக்­குள், ‘பாரத் நெட்’ பயன்­ப­டுத்­து­வோர் எண்­ணிக்கை, 60 கோடி­யாக அதி­க­ரிக்­கும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை