தனியார் வங்கிகளின் வாராக்கடன் 72 சதவீதம் உயர்வு

தினமலர்  தினமலர்
தனியார் வங்கிகளின் வாராக்கடன் 72 சதவீதம் உயர்வு

மும்பை : கடந்த நிதி­யாண்­டில், தனி­யார் வங்­கி­களின் வாராக்­க­டன், 72 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது.

கடந்த, 2016 – 17ம் நிதி­யாண்­டில், அனைத்து வங்­கி­களின் மொத்த வாராக்­க­டன், 29.1 சத­வீ­தம் அதி­க­ரித்து, 7.64 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இது, முந்­தைய நிதி­யாண்­டில், 5.90 லட்­சம் கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்­தில், பொதுத் துறை வங்­கி­கள் மற்­றும் தனி­யார் வங்­கி­களின் மொத்த வாராக்­க­டன், முறையே, 25 சத­வீ­தம் மற்­றும் 72.46 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்ளன. தனி­யார் துறை­யில், ஆக்­சிஸ் வங்­கி­யின் வாராக்­க­டன், இரு மடங்கு உயர்ந்து, 6,088 கோடி ரூபா­யில் இருந்து, 21,280 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, யெஸ் பேங்க் ஆகி­ய­வற்­றின் வாராக்­க­ட­னும் உயர்ந்­துள்­ளது.

பொதுத் துறை வங்­கி­களின் வாராக்­க­டன் அதி­க­ரித்து வந்த நிலை­யில், தற்­போது தனி­யார் வங்­கி­களின் வாராக்­க­டன் அதி­க­ரித்­துள்­ள­தற்கு, அது­போன்ற கடன்­களை வரை­ய­றுப்­ப­தற்­கான அள­வீட்டை, வங்­கி­கள் முழு­மை­யாக பின்­பற்ற வேண்­டும் என, ரிசர்வ் வங்கி உத்­த­ர­விட்­டுள்­ளது தான் கார­ணம்.

வங்­கி­களின் வாராக்­க­டன் உயர்ந்த போதி­லும், கடந்த நிதி­யாண்­டில், 6,039.30 கோடி ரூபாய் நிகர லாபத்தை ஈட்­டி­யுள்ளன. அவை, முந்­தைய நிதி­யாண்­டில், 23,091.50 கோடி ரூபாய் நிகர இழப்பை சந்­தித்­தன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்த ஆய்­வில், தனி­யார் துறை­யைச் சேர்ந்த, கரூர் வைஸ்யா மற்­றும் சிட்டி யூனி­யன் வங்­கி­கள் சேர்க்­கப்­ப­ட­வில்லை. எஸ்.பி.ஐ.,யின் துணை வங்­கி­கள், மூன்­றாம் காலாண்டு நில­வரம் கணக்­கில் எடுத்­துக் கொள்­ளப்­பட்டு உள்­ளது.

மூலக்கதை