சிறிலங்கா பெண்ணுடன் கள்ளமாக தங்கியிருந்த ஜேர்மன் பிரஜை நாடுகடத்தல்!

PARIS TAMIL  PARIS TAMIL
சிறிலங்கா பெண்ணுடன் கள்ளமாக தங்கியிருந்த ஜேர்மன் பிரஜை நாடுகடத்தல்!

 சிறிலங்காவில் வீசா இன்றி தங்கியிருந்த ஜேர்மன் நாட்டு பிரஜை ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார். 

 
களுத்துறை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அவர் நாடுகடத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
இப்ராஹிம் அல்சதுரி என்ற ஜேர்மனிய பிரஜையே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார். 
 
பயாகல பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் மீது ஏற்பட்ட காதலால் அவர் சட்டவிரோதமாக நீண்டகாலம் தங்கிருந்துள்ளார். 
 
குறித்த நபர் வீசா இன்றி தங்கியிருந்தை அறிந்து கொண்ட பொலிஸார் நீதிமன்றுக்கு தகவல் வழங்கிய நிலையில், அவரை நாடு கடத்துமாறு களுத்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
ஜேர்மனிய பிரஜை கைது செய்யப்பட்டு மிரிஹான தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அங்கிருந்த தப்பி சென்று காதலியிடம் சென்றுள்ளார். 
 
எனினும் அவரை மீண்டும் கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில், அவரை நாடு கடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 
அதற்கமைய அவர் விசேட பாதுகாப்புடன் நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு அதிகாரி எல்.எஸ்.ஹெட்டியாராச்சி நேற்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை