டெல்லி, உ.பியில் அரசு உயர் அதிகாரிகள் வீட்டில் ரெய்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லி, உ.பியில் அரசு உயர் அதிகாரிகள் வீட்டில் ரெய்டு

புதுடெல்லி: உத்தரபிரதேசம், டெல்லியில், அரசு உயர் அதிகாரிகளின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், டெல்லி, உத்தரபிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.



குறிப்பாக, காஜியாபாத், பக்பாத் ஆகிய மாவட்டங்களின் முன்னாள் கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோ, நொய்டா உள்ளிட்ட 6 நகரங்களில், 15 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பல அதிகாரிகள் வரிஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த மாதம் பல்வேறு இடங்களில், அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தபோது, கணக்கில் காட்டப்பட்டாத ரூ. 10 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை