‘முதல்வரை கொலை செய்து விடுவோம்’ வைரலாக பரவும் மிரட்டல் வீடியோ

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘முதல்வரை கொலை செய்து விடுவோம்’ வைரலாக பரவும் மிரட்டல் வீடியோ

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது.   இவரையும் லூதியானா தொகுதி எம். பி. யாக இருக்கும் ரவ்நீத் சிங்கையும் கொலை செய்து விடுவதாக மிரட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் முதல்வர் அமரீந்தர் சிங்கையும் எம். பி.

ரவ்நீத் சிங்கையும் சரமாரியாக திட்டும் நபர்கள், இருவரையும் கடுமையாக எச்சரித்து விட்டு இறுதியில் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள்.

மேலும் அந்த வீடியோவில் கனடா நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் ஹர்ஜித் சிங் இந்தியாவிற்கு வந்த போது அவருக்கு தகுந்த மரியாதை அளிக்காததாலும் சீக்கியர்களுக்கு எதிராக அமரீந்தர் சிங் செயல்பட்டு வருவதாலும் அவரை கொலை செய்து விடுவதாக விடுக்கப்பட்ட மிரட்டலுக்கு காரணம் சொல்கிறது அந்த வீடியோ பதிவு.

 இந்த வீடியோவினை எடுத்தது யார், இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று பஞ்சாப் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பஞ்சாபில் எடுக்கப்பட்டதா? இல்லை கனடாவில் எடுக்கப்பட்டதா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர் பஞ்சாப் மாநில போலீசார்.

முதல்வரை கொலை செய்து விடுவதாக மிரட்டும் வீடியோ பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை