மெட்ரோ ரயில் சேவை திட்டத்தில் திருநங்கைகளுக்கு அங்கீகாரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மெட்ரோ ரயில் சேவை திட்டத்தில் திருநங்கைகளுக்கு அங்கீகாரம்

மெட்ரோ ரயில் சேவை திட்டம் கேரள மாநிலத்தில் உள்ள முக்கிய நகரான கொச்சியில் கடந்த 2012ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.

மேலும், வெகுவிரைவில் ரயில் சேவையும் தொடங்கப்பட உள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.

இதில், 23 இடங்கள் திருநங்கைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ரயில் நிலைய துப்புரவுப்பணி, பயணச்சீட்டு வழங்குதல் போன்ற பணிகள் திருநங்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்கும் திருநங்கைகள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

ரயில் நிலையங்களில் பணிபுரியும் பெண்களுக்கும் திருநங்கைகளுக்கும் இடையே பணிகளில் எந்த பாகுபாடும் அளிக்கப்படமாட்டாது என்று கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் எலியாஸ் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு அவர்களுக்கு முக்கியமான ஒன்று. இந்த முதல் முயற்சி வெற்றிகரமாக அமையும் என நாங்கள் நம்புகிறோம்.



மற்ற நிறுவனங்களும் இதே போல மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலே முதல் முறை திருநங்கைகளை ஊழியர்களாகப் பணியில் அமர்த்துவதில் கேரளா மெட்ரோ சேவை நிர்வாகம் முக்கிய பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை