சரிவிலிருந்து மீண்ட ரூபாய் மதிப்பு : 64.48

தினமலர்  தினமலர்
சரிவிலிருந்து மீண்ட ரூபாய் மதிப்பு : 64.48

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளதன் காரணமாக ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அமெரிக்க கரன்சியை அதிகம் விற்பனை செய்தன. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் சரிவுடன் காணப்பட்ட இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (மே 25, காலை 9 மணி) அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து 64.48 ஆக இருந்தது. முன்னதாக நேற்றைய ரூபாய் மதிப்பு 64.73 ஆக இருந்தது. வெளிநாட்டு நிதி வருகை அதிகரித்திருப்பதும் சர்வதேச சந்தையில் ரூபாய் மதிப்பு உயர முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மூலக்கதை