இங்கிலாந்து மக்கள் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைப்போம் : கேப்டன் மோர்கன் உறுதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இங்கிலாந்து மக்கள் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைப்போம் : கேப்டன் மோர்கன் உறுதி

லீட்ஸ்: இங்கிலாந்து-தென் ஆப்ரிக்கா இடையேயான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி லீட்சில், இந்திய நேரப்படி இன்று மாலை 6. 30 மணிக்கு தொடங்குகிறது. மான்செஸ்டர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு, இந்த போட்டி தொடங்கும் முன்பாக ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இரு அணி வீரர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடவுள்ளனர். மான்செஸ்டர் நகரில் இருந்து லீட்ஸ் வெகு தொலைவில் இல்லை என்றாலும், இரு அணி வீரர்களும் போட்டிக்கு தயாராகி வருகின்றனர்.



 இது குறித்து இங்கிலாந்து கேப்டன் இயான் ேமார்கன் கூறுகையில், ‘நிச்சயமாக இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைப்போம். எங்கள் நாட்டின் பாதுகாப்பு மீது முழு நம்பிக்கை உள்ளது.

இங்கிலாந்து பாதுகாப்பு ஆலோசகர் ரெக் டிக்சனிடம் பேசியுள்ளோம். அனைத்தும் ‘ஓகே’ என அவர் கூறியுள்ளார்’ என்றார்.

லீட்ஸ் மைதானம், வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தென் ஆப்ரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் கூறுகையில், ‘காலை உணவின் போது நீண்ட நேரம் குண்டு வெடிப்பு பற்றி பேசி கொண்டிருந்தோம்.

எனினும் வீரர்கள் அனைவரும் போட்டிக்கு முழுமையாக தயாராகியுள்ளனர். எங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணியில் கவனம் செலுத்துவது முக்கியமானது.

துணிச்சலான கிரிக்கெட்டை விளையாடி, நடந்ததை மறக்க முயல்வோம்’ என்றார்.


.

மூலக்கதை