சிறிலங்கா செல்லும் அனைவருக்கும் எச்சரிக்கை! கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய நடைமுறை

PARIS TAMIL  PARIS TAMIL
சிறிலங்கா செல்லும் அனைவருக்கும் எச்சரிக்கை! கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய நடைமுறை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அடுத்த மாதம் முதல் புதிய பாதுகாப்பு நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறுவுறுத்தப்பட்டுள்ளது. 
 
விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய, விமான சேவைகள் நிறுவனத்தின் முகாமையாளர் எச்.எஸ்ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
 
விமான பயணத்தின் போது பயணிகளால் கொண்டு செல்லப்படும் பொருட்கள் தொடர்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. 
 
குடிபானங்கள், திரவங்கள் நிரப்பட்ட பொருட்கள், வாசனைத் திரவியங்கள், எண்ணெய் வகைகள், அழகு சாதனங்கள் என்பன தொடர்பில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவுள்ளன. 
 
மேற்குறிப்பிட்ட அனைத்து பொருட்களும் ஒரு லீற்றருக்கு மேல் அதிகரிக்க கூடாது. திரவத்திலான கொள்கலன்கள் 20X20 என்ற அளவில் வெளிப்படையாக தெரியும் வகையிலும் மீண்டும் மூடிக்கொள்ள கூடிய பொலித்தீன் பைகளில் மூட வேண்டும். ஒரு பயணியினால் அந்த பை ஒன்று மாத்திரமே கொண்டு செல்ல முடியும்.
 
இதற்கு மேலதிகமாக கொண்டு செல்லும் திட்டம் இருந்தால் அவற்றினை விமான டிக்கட் ஒப்படைக்கும் இடத்தில் ஒப்படைக்கப்படும் பயண பைகளுடன் எடுத்து செல்ல முடியும்.
 
இதற்கு மேலதிகமாக மருந்து வகைகள், சிறு பிள்ளைகளின் உணவு வகைகளுக்கு அவசியமான திரவ வகைகள் இருப்பின் அவற்றினை வைத்தியர் ஒருவரிடம் உறுதிபடுத்தப்பட்டதன் பின்னர் மருத்து வகைகளுடன் தம்வசம் வைத்து கொள்ள வேண்டும்.
 
விமான நிலைய தீர்வை வரியற்ற கடைகளில் கொள்வனவு செய்யும் பொருட்களுகளை அந்த கடைகளிலேயே பொதியிட்டு வழங்கப்படும். குறித்த சட்டத்திட்டங்கள் அந்த பொருட்களுக்கும் உள்ளடக்கப்படுகின்ற நிலையில், அந்த பொருட்களுக்கான ரசீதுகளை உடன் வைத்துக் கொள்வது அவசியமாகும். 
 
விமான நிலைய பரிசோதகரினால் குறித்த பொருட்கள் தொடர்பில் கேட்கப்படும் ஆதாரங்களை பயணிகள் வழங்குவது அவசியமாகும். 
 
அவ்வாறு ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறினால் விமான பயணிகளின் பொருட்கள் விமான நிலையத்திற்குள் கொண்டு செல்வதற்கு தடை செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
கட்டுப்பாடு விதிக்கப்படும் பொருட்களின் விபரங்கள் வருமாறு,
 
Water, Cool drinks, soup, Jam, souse, Gruel, Liquid, Cream, Medicine, Oil, perfumes, Spray, Gel, Air pressure contents, Shaving foam, Other foam, Eyebrow cosmetics, room heating maintain Liquid, Steam Liquid

மூலக்கதை