50 நாள் சிறைவாசத்திற்கு பின் ஜாமீன் கேட்கும் ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
50 நாள் சிறைவாசத்திற்கு பின் ஜாமீன் கேட்கும் ...

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மதிமுக தலைவர் வைகோ, தனக்கு ஜாமீன் அளிக்கும்படி சென்னை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.


 
  2009ம் ஆண்டில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக வைகோ மீது குற்றம் சுமத்தப்பட்டு, அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது.  அந்த வழக்கு பல வருடங்களாக கிடப்பில் இருந்தது.

அந்நிலையில், வைகோ கடந்த ஏப்ரல் 3ம் தேதி திமன்றத்தில் தானாக சரணைடந்து வழக்கை சந்தித்தார். எனவே, அவரை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி, அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும் படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

 
  மேலும், ஏப்ரல் 17ம் தேதி 15 நாட்கள் காவல் முடிந்து அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போதும், தான் ஜாமீனில் செல்ல விருப்பமில்லை என வைகோ கூறியதையடுத்து, அவரின் நீதிமன்ற காவல் ஜூலை 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.  
  இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், வைகோ சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 50 நாட்கள் அவர் சிறையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை