ராஜிவ் கொலை வழக்கில் சர்ச்சைக்குள்ளான சாமியார் சந்திரசாமி காலமானார்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ராஜிவ் கொலை வழக்கில் சர்ச்சைக்குள்ளான சாமியார் சந்திரசாமி காலமானார்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சர்ச்சைக்குள்ளான சாமியார் சந்திரசாமி காலமானார். அவருக்கு வயது 66.

பல்வேறு உடல் உறுப்பு செயலிழப்பு காரணமாக இவர் இன்று மரணமடைந்துள்ளார். 1948ம் ஆண்டு பிறந்தத இவரது இயற்பெயர் நேமிசந்த். ராஜஸ்தான் மாநிலத்தின் பேஹ்ரூர் பகுதியில் வட்டிக்கு பணம் கொடுப்பவராக வாழ்க்கையை தொடங்கினார். பிற்காலத்தில் சாமியாராக அவதாரம் எடுத்தார். இவரை மர்ம சாமியார் என்றே பலரும் கருதி வந்தனர்.

ராஜிவ் கொலை வழக்கின்போது சர்ச்சைக்குள்ளான சாமியார் சந்திரசாமியாகும். இவர் சர்வதேச அளவில் ஆயுத டீலராக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு இருந்த்து. அந்நிய செலவாணி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளிலும் இவர் சிக்கியவர்.

ராஜிவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன், சந்திரசாமியிடம் விசாரிக்க பரிந்துரைத்தது. இந்த நிலையில், சந்திரசாமி இன்று மரணமடைந்துள்ளார். இவரும் பாஜகவை சேர்ந்த தற்போதைய ராஜ்யசபா எம்.பியுமான சுப்பிரமணியன்சாமியும் நண்பர்கள் என கூறப்படுவதுண்டு.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மூலக்கதை