ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து மகனை அறிமுகம் செய்யும் சன்னி தியோல்

தினமலர்  தினமலர்
ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து மகனை அறிமுகம் செய்யும் சன்னி தியோல்

பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சன்னி தியோல். சமீபகாலமாக போதிய வாய்ப்புகள் இல்லாததால் முன்பு போன்று நிறைய படங்களில் நடிப்பது கிடையாது. இருந்தாலும் சில படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். இந்நிலையில் சன்னி தியோல், தனது மகன் கரண் தியோலை சினிமாவில் களம் இறக்க உள்ளார். முதல்படத்தை சன்னி தியோலே இயக்கி, தயாரிக்கிறார். படத்திற்கு பல் பல் தில் கி பாஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தை சன்னி தியோலுடன், ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இதுகுறித்து சன்னி தியோல் கூறியிருப்பதாவது... "வாழ்க்கை ஒரு வட்டம். என்னை என் தந்தை தர்மேந்திரா, பெட்டாப் படத்தின் மூலம் அறிமுகம் செய்தார். நான் எனது மகனை பல் பல் தில் கி பாஸ் படத்தின் மூலம் அறிமுகம் செய்ய உள்ளேன். என்னுடன் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து என் மகனை அறிமுகம் செய்கிறது" என்றார்.

மூலக்கதை