ஜோதிடர், சாமியார், மந்திர தந்திரங்களில் வல்லவர்.. பல முகங்களை கொண்ட சந்திரா சாமி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜோதிடர், சாமியார், மந்திர தந்திரங்களில் வல்லவர்.. பல முகங்களை கொண்ட சந்திரா சாமி!

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சர்ச்சைக்குள்ளான சந்திரா சாமி உடல் நலக்குறைவால் காலமானார். இவர் ஜோதிடர், சாமியார் என பலமுகங்களை கொண்டவர்.

1948 ஆம் ஆண்டு பிறந்தவர் சந்திரா சாமி. இவருடையான உண்மையான பெயர் நேமி சந்த் ஆகும்.

இவர் சர்ச்சைக்குரிய மந்திர தந்திர பயிற்சியாளர் ஆவர். பொதுமக்கள் பலர் இவரை சாமியார் என்றும் அழைத்து வந்தனர்.

வட்டிக்கு விட்ட குடும்பம்

ராஜஸ்தானின் பெஹாரை சேர்ந்த இவரது தந்தை வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்துவந்துள்ளார். சந்திரா சாமியின் சிறுவயதிலேயே அவர்கள் குடும்பத்டன் ஹைதராபாத்துக்கு குடிபெயர்ற்துவிட்டனர்.

மந்திர தந்திரங்களில் ஆர்வம்

சிறுவயதிலேயே மந்திர தந்திரங்களில் ஆர்வம் கொண்டவராக இருந்தார் சந்திரா சாமி. இதனால் இளம் வயதிலேயே வீட்லை விட்டுச் சென்ற அவர், உப்தயார் அமர் முனி மற்றும் தந்திரி கோபினாத் கவிராஜிடம் மாணவனாக சேர்ந்தார்.

தான் ஒரு சித்தர்

பின்னர் பீகாரில் உள்ள காட்டில் வசித்த அவர் தியானம் மேற்கொள்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கு அதிக சக்தி கிடைத்து விட்டதாக கூறிய அவர் தன்னை ஒரு சித்தர் என்றும கூறிக்கொண்டார்.

ஜோதிட திறமையால் புகழ்

ஜெயின் சமூகத்தை சேர்ந்த சந்திரா சாமி மாகாளியை பற்றுடன் வணங்கி வந்தார். முதலில் தனது ஜோதிட திறமையின் மூலம் புகழ்பெற்றார்.

நரசிம்மராவுடன் நெருக்கம்

இதன்மூலம் அப்போது அமைச்சராக இருந்த நரசிம்ம ராவுக்கு நண்பரானார். பின்னர் நரசிம்மராவின் ஆன்மீக ஆலோசகராகவும் சந்திரா சாமி இருந்தார்.

டெல்லியில் ஆசிரமம்

இதைத்தொடர்ந்து நரசிம்ம ராவ் பிரதமரானார். அப்போது சந்திரா சாமி டெல்லி குதுப் நிறுவன பகுதியில் விஷ்வ தர்மயதான சனாதன் என்றழைக்கப்பட்ட ஒரு ஆசிரமம் கட்டினார். இந்திரா காந்தியால் இந்த ஆசிரமத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டது.

பலபேருக்கு அறிவுரை

புருனேயின் சுல்தான், ஷேக் ஈசா பின் சல்மான் அல் கலீஃபா, நடிகை எலிசபெத் டெய்லர், பிரித்தானிய பிரதமர் மார்கரெட் தாட்சர், ஆயுத வியாபாரி அட்னன் கஷோகிகி, நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் 'டைனி' ரோலண்ட் ஆகியோருக்கு சந்திரா சாமி அறிவுரை வழங்கியுள்ளார்.

விசாரிக்கவே இல்லை

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இவருக்கு தொடர்பு உள்ளது என கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து இவரிடம் விசாரிக்க ஜெயின் கமிஷன் உத்தரவிட்டது. ஆனால் கடைசிவரை அவர் விசாரிக்கப்படவே இல்லை.

இன்று காலமானார்

66 வயதான சந்திரா சாமி இன்று காலமானார். சிறு நீரக செயலிழப்பு காரணமாக இவர் இன்று மரணமடைந்தார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மூலக்கதை