மக்களுக்காக குரல் கொடுப்பது என்பது இதுதான்.. சபாஷ் சுரபி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மக்களுக்காக குரல் கொடுப்பது என்பது இதுதான்.. சபாஷ் சுரபி!

கொச்சின்: மலையாள திரையுலக நடிகை சுரபி. இவர் இந்த வருடம் மின்னாமின்னுங்கு என்னும் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

நேற்று ஒரு பள்ளிக்கூட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுரபி கொச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, களியக்காவிளை என்ற இடத்தில் உள்ள சுங்க சாவடியில் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தன.

சுரபியின் காருக்கு முன்னால் நின்று கொண்டிருந்த காரில் இருந்த பெண் உடல் நல குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வலியால் துடித்து கொண்டிருந்தார்.

இதை பார்த்த சுரபி நேராக சோதனை சாவடி பூத்துக்கு சென்றார். அங்கிருந்த ஊழியர்கள் மிக அசால்ட்டாக வேலையை பார்த்து கொண்டிருந்ததை கண்டு ஆத்திரமடைந்த அவர், ஊழியர்களிடம் வேகமாக வேலை பார்த்து அந்த காரை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.

ஆனால் அதனை கேட்க சுங்கச்சாவடி ஊழியர்கள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை எனத்தெரிகிறது. இதனால் சுங்க சாவடி ஊழியர்களுக்கும், சுரபிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர், சுரபிக்கு ஆதரவாக பொது மக்கள் அங்கு வந்ததையொட்டி, ஊழியர்கள் விரைவாக செயல்பட்டனர். இது குறித்து பேசிய சுரபி, உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பெண்ணை அவர் கணவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்தது என் மனதை பாதித்தது.

அதனால் தான் அவர்களுடன் வாக்குவாதம் செய்தேன் என கூறியுள்ளார். இந்த வீடியோ வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மூலக்கதை