கைதிகள் நாடு திரும்ப உதவும் இந்திய தொழிலதிபர்

தினமலர்  தினமலர்
கைதிகள் நாடு திரும்ப உதவும் இந்திய தொழிலதிபர்

துபாய்: துபாயில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் ஒருவர், அங்கு விடுதலை செய்யப்படும் வெளிநாட்டு கைதிகள் சொந்த நாடு திரும்புவதற்காக 130,790 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி வழங்க முன்வந்துள்ளார்.மும்பையில் பிறந்த பரோஸ் மெர்சண்ட் என்பவர், துபாயில் பியூர் கோல்ட் ஜூவ்ல்லர் நிறுவனத்தின் சேர்மனாக உள்ளார். அவர், அங்குள்ள தொண்டு நிறுவனம் ஒன்றுடன், வெளிநாட்டு கைதிகள் சொந்த ஊர் திரும்புவது தொடர்பாக ஒப்பந்தம் செய்துள்ளார். இதன்படி, சிறையிலிருந்து விடுதலையாகும் வெளிநாட்டு கைதிகள், சொந்த ஊர் திரும்பி குடும்பத்தினருடன் சேர அவர்களுக்கு விமான டிக்கெட் எடுத்து தரப்படும். தாயகம் திரும்ப தயாராக உள்ள வெளிநாட்டு கைதிகள் பற்றிய விபரத்தை, மாதந்தோறும், தொண்டு நிறுவனம் அளிக்கும் போது நிதி ஒதுக்கப்படும். தற்போது 132 கைதிகள் விடுதலைக்காக 150,000 தினார்களை பிரோஸ் வழங்கியுள்ளார்.பிரோஸ் கூறியதாவது: இந்த குற்றவாளிகள் சூழ்நிலை கைதிகள்.உண்மையான குற்றவாளிகள் அல்ல. கடன் காரணமாக அவர்கள் சிறையில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை