ஜூன் 1ம் தேதி முதல் மகாராஷ்டிராவில் விவசாயிகள் ஸ்டிரைக்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜூன் 1ம் தேதி முதல் மகாராஷ்டிராவில் விவசாயிகள் ஸ்டிரைக்

மும்பை:  விவசாய கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மகாராஷ்டிராவில், ஜூன் 1ம் தேதி முதல் விவசாயிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலங்களில், பாஜ ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவும் ஒன்று. பருவமழை பெய்யாததால் விவசாயிகள் மிகுந்த கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், இலவச மின்சாரம், கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு போதிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் துயர்துடைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உறுதியளித்திருந்தார்.

ஆனாலும் இன்னும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து மாநில அளவிலான வேலைநிறுத்தம் செய்ய விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.



இதுதொடர்பாக, அகமத் நகர், நாஷிக், அவுரங்காபாத் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர். ஸ்டிரைக் தொடர்பாக கிராம பஞ்சாயத்துக்களிலும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, வருகிற ஜூன் 1ம் தேதி முதல், காய்கறி, பழங்கள், உணவு தானியங்கள் போன்றவற்றை மார்க்கெட்டுக்கு வழங்குவதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.



.

மூலக்கதை