எல்.ஐ.சி.,க்கு முதலீடுகளில் ரூ.1.80 லட்சம் கோடி வருவாய்

தினமலர்  தினமலர்
எல்.ஐ.சி.,க்கு முதலீடுகளில் ரூ.1.80 லட்சம் கோடி வருவாய்

மும்பை : பொதுத் துறை­யைச் சேர்ந்த, எல்.ஐ.சி., நிறு­வ­னம், அரசு, தனி­யார் கடன் பத்­தி­ரங்­கள், பங்­கு­கள், மாநில வளர்ச்சி திட்ட கடன்­களில், குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு முத­லீடு செய்­துள்­ளது.

இவற்­றின் வாயி­லா­க­வும், வட்டி, டிவி­டெண்டு வரு­வாய், பங்கு விற்­ப­னை­யில் லாபம் போன்ற இதர இனங்­கள் மூல­மா­க­வும், 2016 – 17ம் நிதி­யாண்­டில், எல்.ஐ.சி.,க்கு மொத்­தம், 1,80,117 கோடி ரூபாய் வரு­வாய் கிடைத்­துள்­ளது. இந்­நி­று­வ­னத்­தின் மொத்த முத­லீடு ­களின் சந்தை மதிப்பு, 17.08 சத­வீதம் அதி­க­ரித்து, 21,09,253 கோடி ரூபா­யில் இருந்து, 24,69,589 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.

மதிப்­பீட்டு நிதி­யாண்­டில், மத்­திய, மாநில அர­சு­களின் கடன் பத்­தி­ரங்­களில் மட்­டும், எல்.ஐ.சி., 2.60 லட்­சம் கோடி ரூபாய் முத­லீடு செய்­துள்­ளது. பங்­கு­களில், மொத்­தம், 41,751 கோடி ரூபாய் முத­லீடு செய்து, அவற்­றின் விற்­பனை மூலம், 19,302 கோடி ரூபாய் ஈட்­டி­யுள்­ளது என, எல்.ஐ.சி., நிறு­வ­னத்­தின் உய­ர­தி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

மூலக்கதை