ஆரோக்கிய பராமரிப்பு நிறுவனங்கள் வருவாய் உயரும்

தினமலர்  தினமலர்
ஆரோக்கிய பராமரிப்பு நிறுவனங்கள் வருவாய் உயரும்

மும்பை : ‘ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு துறை­யில் உள்ள, கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களின் வரு­வாய், நடப்பு நிதி­யாண்­டில், 15 சத­வீ­தம் வளர்ச்சி காணும்’ என, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.

‘இந்­தியா ரேட்­டிங்ஸ் அண்டு ரிசர்ச்’ நிறு­வ­னம், ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு துறை குறித்து வெளி­யிட்­டு உள்ள அறிக்கை: கடந்த, 2016 – 17ம் நிதி­யாண்­டின், முதல் அரை­யாண்­டில், நிறு­வ­னம் கணித்­த­படி, ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு துறை­யின் வரு­வாய், 15 சத­வீ­தம் வளர்ச்சி கண்­டி­ருந்­தது. எனி­னும், பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கை­யால், மூன்­றாம் காலாண்­டில், இந்த வளர்ச்சி, 10 சத­வீ­த­மாக குறைந்­தது. நான்­கா­வது காலாண்­டில், இயல்பு நிலை திரும்­பி­ய­தால், ஓர­ளவு வளர்ச்சி காணப்­பட்­டது.

நடப்பு, 2017 – 18ம் நிதி­யாண்­டில், ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு துறை­யில் உள்ள, கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களின் வரு­வாய், 15 சத­வீ­தம் வளர்ச்சி காணும். அப்­பல்லோ ஆஸ்­பி­டல்ஸ், 2018 – 19ம் நிதி­யாண்­டில், நோயா­ளி­க­ளுக்­காக, கூடு­த­லாக, 1,049 படுக்­கை­களை இணைக்க உள்­ளது. அது போல, நாரா­யண ஹிரு­த­யலயா நிறு­வ­னம், 2019 – 20ம் நிதி­யாண்­டில், 647 படுக்­கை­களை சேர்க்க உள்­ளது.

மணி­பால் ஹெல்த் என்­டர்­பி­ரை­சஸ் நிறு­வ­னம், 1,000 படுக்­கை­களை அதி­க­ரிக்க திட்­ட­மிட்டு உள்­ளது. குவா­லிட்டி கேர் இந்­தியா நிறு­வ­னம், 2020 மார்ச்­சுக்­குள், புதி­தாக, 620 படுக்­கை­களை ஏற்­ப­டுத்த முடிவு செய்­துள்­ளது. மத்­திய, மாநில அர­சு­கள், ஆரோக்­கிய பரா­ம­ரிப்­பிற்கு தீவிர முக்­கி­யத்­து­வம் கொடுத்து வரு­கின்றன. அரசு காப்­பீட்டு திட்­டங்­களின் கீழ், அடித்­தட்டு மக்­க­ளுக்கு பல்­வேறு மருத்­துவ சிகிச்­சை­கள் வழங்­கப்­ப­டு­கின்றன. இது போன்ற கார­ணி­கள், ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு துறை­யின் வளர்ச்­சிக்கு, துணை புரிந்து வரு­கின்றன.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

மூலக்கதை