10 ஆயிரம் கோடி டாலர் முதலீடு; சாப்ட் பேங்க் நிறுவனம் அதிரடி

தினமலர்  தினமலர்
10 ஆயிரம் கோடி டாலர் முதலீடு; சாப்ட் பேங்க் நிறுவனம் அதிரடி

புதுடில்லி : ஜப்­பா­னைச் சேர்ந்த, சாப்ட் பேங்க் நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: நிறு­வ­னத்­தின், சாப்ட் பேங்க் விஷன் பண்டு எனும் நிதி­யத்­தின் கீழ் திரட்­டப்­பட்ட, 9,300 கோடி டாலர் மூல­த­னத்தை, அடுத்த ஆறு மாதங்­களில், 10 ஆயி­ரம் கோடி டால­ராக உயர்த்த திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது.

இந்த நிதி, தொழிற்­நுட்­பத் துறை­யில் முத­லீடு செய்­யப்­படும். இதன்­படி, பொது மற்­றும் தனி­யார் துறை­க­ளைச் சேர்ந்த, தொழிற்­நுட்ப நிறு­வ­னங்­களை கைய­கப்­ப­டுத்­து­வது அல்­லது பகுதி முத­லீடு செய்­வது உள்­ளிட்ட வர்த்­த­கத்­திற்கு, இந்த நிதி பயன்­ப­டுத்­திக் கொள்­ளப்­படும்.

புதிய தொழிற்­நுட்­பம், குறிப்­பாக, கரு­வி­க­ளுக்­கி­டை­யே­யான இணைய பயன்­பாடு, அறி­வு­சார் சொத்­து­ரிமை, செயற்கை நுண்­ண­றிவு உள்­ளிட்ட துறை சார்ந்த நிறு­வ­னங்­களில், இந்த நிதி முத­லீடு செய்­யப்­படும். மேலும், தொலை தொடர்பு, அடிப்­படை கட்­ட­மைப்பு, கணினி சார்ந்த உயிரி தொழிற்­நுட்­பம், மேக கணினி தொழிற்­நுட்­பம், மென்­பொ­ருள் உரு­வாக்­கம் உள்­ளிட்­ட­வற்­றுக்­கும் முத­லீடு செய்­யப்­படும். இவ்­வாறு அதில் கூறப்­பட்டுள்­ளது.

மூலக்கதை