பிரதமர் மோடியின் மூன்றாண்டு ஆட்சியில்... பங்கு சந்தை முதலீட்டு மதிப்பு ரூ.50 லட்சம் கோடி அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
பிரதமர் மோடியின் மூன்றாண்டு ஆட்சியில்... பங்கு சந்தை முதலீட்டு மதிப்பு ரூ.50 லட்சம் கோடி அதிகரிப்பு

மும்பை : மத்­தி­யில், பிர­த­மர் மோடி தலை­மை ­யி­லான அரசு அமைந்து, மூன்று ஆண்­டு­கள் முடி­வ­டைந்து உள்­ளது. இதே காலத்­தில், பங்­குச் சந்­தை­யில் முத­லீட்­டா­ளர்­களின் பங்­கு­கள் மதிப்பு, 50 லட்­சம் கோடி ரூபாய் அதி­க­ரித்து உள்­ளது.

மத்­திய அர­சின் பல்­வேறு சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­கள், தொழில் கொள்­கை­கள் போன்­ற­வற்­றால், பங்­குச் சந்­தை­கள் ஏற்­றம் கண்டு வரு­கின்றன. கடந்த மூன்று ஆண்­டு­களில், மும்பை பங்­குச் சந்­தை­யின், ‘சென்­செக்ஸ்’ குறி­யீடு, 26 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு, 6,000 புள்­ளி­கள் அதி­க­ரித்­துள்­ளது.

சந்தை மதிப்புஇதே காலத்­தில், ஒட்­டு­மொத்த பங்­குச் சந்­தை­யில், பங்­கு­களின் சந்தை மதிப்பு, 75 லட்­சம் கோடி ரூபா­யில் இருந்து, 125 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­து உள்­ளது. ஆக, பங்­கு­களின் சந்தை மதிப்பு, 50 லட்­சம் கோடி ரூபாய் அதி­க­ரித்­துள்­ளது. இதில், டாடா, ரிலை­யன்ஸ், பிர்லா, பஜாஜ் போன்ற பெரிய குழு­மங்­களின் பங்­கு­கள் மதிப்பு, குறைந்­த­பட்­சம், தலா, 1 லட்­சம் கோடி ரூபாய்க்­கும் அதி­க­மாக உயர்ந்­துள்­ளது. அது போல, எச்.டி.எப்.சி., – ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, வேதாந்தா, எல் அண்டு டி, மகிந்­திரா, ஹிந்­துஜா, ஐ.டி.சி., – கோத்­ரெஜ் உள்­ளிட்ட கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களின் பங்­கு­களின் மதிப்­பும் அதி­க­ரித்­துள்­ளது. பொதுத் துறை நிறு­வன பங்­கு­களின் சந்தை மதிப்பு, 22 சத­வீ­தம் அதி­க­ரித்து, 3.65 லட்­சம் கோடி ரூபாய் உயர்ந்­துள்­ளது.

அதிக லாபம்பங்கு மதிப்பு உயர்­வால், அதிக லாபம் அடைந்­த­வர்­களில், நிறு­வ­னர்­கள் முத­லி­டத்தை பிடித்­துள்­ள­னர். அடுத்த இடங்­களில், அன்­னிய நிதி நிறு­வ­னங்­கள், உள்­நாட்டு நிதி நிறு­வ­னங்­கள் ஆகி­யவை உள்ளன. பங்­குச் சந்தை முத­லீ­டு­களில், சில்­லரை முத­லீட்­டா­ளர்­களின் பங்கு, 10 சத­வீ­தத்­திற்­கும் குறை­வா­கவே உள்­ளது. அத­னால், பங்­கு­களின் சந்தை மதிப்பு உயர்­வில், அவர்­களின் பங்கு சிறி­த­ளவே உள்­ளது. நகர்ப்­பு­றங்­களில், 8 சத­வீத குடும்­பங்கள் தான், பங்­கு­களில் முத­லீடு செய்­கின்றன. இது, மியூச்­சு­வல் பண்டு திட்­டங்­களில், 10 சத­வீ­தம் என்ற அள­விற்கு உள்­ளது. கிரா­மப்­புற குடும்­பங்­களில், பங்கு முத­லீட்­டா­ளர்­களின் பங்கு, 1 சத­வீ­தத்­திற்­கும் கீழ் உள்­ளது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் அசத்தல்கடந்த, 2014 மே முதல், நடப்­பாண்டு, மே, 19 வரை, எச்.டி.எப்.சி., குழு­மத்­தின் மூன்று நிறு­வ­னங்­களின் பங்கு மதிப்பு, 3 லட்­சம் கோடி ரூபா­யில் இருந்து, 6.70 லட்­சம் கோடி ரூபா­யாக ஏற்­றம் கண்­டுள்­ளது.டாடா குழு­மத்­தின் பங்கு மதிப்பு, 1.45 லட்­சம் கோடி ரூபாய் உயர்ந்து, 8.55 லட்சம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. முகேஷ் அம்­பா­னி­யின் ரிலை­யன்ஸ் குழும பங்­கு­களின் சந்தை மதிப்பு, 1 லட்­சம் கோடி ரூபாய் உயர்ந்து, 4.50 லட்­சம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.
குமார மங்­க­ளம் பிர்­லா­வின், ஆதித்ய பிர்லா குழு­மத்­தின் பங்கு மதிப்பு, 1 லட்­சம் கோடி ரூபாய் அதி­க­ரித்து, 3 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. வேதாந்தா, எல் அண்டு டி, கோத்­ரெஜ், மகிந்­திரா ஆகி­ய­வற்­றின் பங்கு மதிப்பு, முறையே, 75 ஆயி­ரம், 60 ஆயி­ரம், 50 ஆயிரம், 35 ஆயி­ரம் கோடி ரூபாய் என்­ற­ள­வில் உயர்ந்­துள்­ளது.

மூலக்கதை