அயர்லாந்து பிரதமராக இந்தியருக்கு வாய்ப்பு

தினமலர்  தினமலர்
அயர்லாந்து பிரதமராக இந்தியருக்கு வாய்ப்பு

டப்ளின் : அயர்லாந்து பிரதமர் எண்டா கென்னி, தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த லியோ வராத்கர் மற்றும் தற்போதைய வீட்டுவசதி துறை அமைச்சர் சைமன் காவ்னேவிற்கும் இடையே பலத்தபோட்டி நிலவுகிறது.

பைன் கேயல் கட்சி சார்பாக, பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக ஓட்டெடுப்பு நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 71 ஓட்டு்களில், இந்திய வம்சாவளியினரான லியோ வராத்கருக்கு 45 ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. இதில் வெற்றிபெறுபவர் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். பின் கீழவை உறுப்பினர்கள் சேர்ந்து தங்களது ஓட்டுக்களை உறுதிசெய்வதன் மூலம், புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

அடுத்த பிரதமர் யார் என்பது ஜூன் 2ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

லியோ வர்தாகர், ஓரினச்சேர்க்கையாளர் என்பதும், அயர்லாந்து அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முதல் ஓரினச்சேர்க்கையாளர் என்ற பெருமை பெற்றவர்.

லியோ வர்தாகர், 2011-14ம் ஆண்டில் அயர்லாந்து போக்குவரத்து,சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், 2014 முதல் 2016ம் ஆண்டில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவிவகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை