இம்மானுவல் மக்ரோனை சந்திக்கிறார் இரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin!!

PARIS TAMIL  PARIS TAMIL
இம்மானுவல் மக்ரோனை சந்திக்கிறார் இரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin!!

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin ஐ இம்மாத இறுதியில் சந்திக்கிறார். 
 
இம்மாதம், 29 ஆம் திகதி,  Vladimir Putin பரிசுக்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கிறார். இம்மானுவல் மக்ரோன் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் Vladimir Putin பரிசுக்கு வருவது இதுவே முதன்முறையாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்ரோன் பதவியேற்றதன் பின்னர், ஜெர்மனியின் தலைவர் Angela Merkel ஐ சந்தித்திருந்தார். அதன் பின்னர் இத்தாலியின் பிரதமர் Paolo Gentiloni நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்திருந்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்த உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே இம்மாதம்,29 ஆம் திகதி இரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin ஐ சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
சந்திப்பு குறித்த மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை