ஹாப் கேர்ள்பிரண்ட் - ஹிந்தி மீடியம் மூன்றுநாள் வசூல் நிலவரம்

தினமலர்  தினமலர்
ஹாப் கேர்ள்பிரண்ட்  ஹிந்தி மீடியம் மூன்றுநாள் வசூல் நிலவரம்

கடந்த வெள்ளியன்று அர்ஜூன் கபூர் - ஸ்ரத்தா கபூர் நடிப்பில் ஹாப் கேர்ள்பிரண்ட் படமும், இர்பான் கான் - சபா ஓமர் நடிப்பில் ஹிந்தி மீடியம் படமும் ரிலீஸாகின. இதில் ஹிந்தி மீடியம் படம் விமர்சர்களால் பாராட்டை பெற்றது, ஆனால் ஹாப் கேர்ள்பிரண்ட் படத்திற்கு அந்த பாராட்டு கூட கிடைக்கவில்லை. மேலும் படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. படம் வெளியான மூன்று நாட்களில் ஹாப்கேர்ள்பிரண்ட் படம் ரூ.32.04 கோடியும், ஹிந்தி மீடியம் படம் ரூ.12.56 கோடியும் வசூலை ஈட்டியுள்ளன. ஹாப் கேர்ள்பிரண்ட் படம் சுமார் ரூ.48 கோடி பட்ஜெட்டிலும், ஹிந்தி மீடியம் ரூ.23 கோடி பட்ஜெட்டிலும் உருவானவை. இதில் ஹாப் கேர்ள்பிரண்ட் சுமார் ரூ.50 கோடியும், ஹிந்தி மீடியம் ரூ.30 கோடி வசூலை பெற்றால் மட்டுமே லாபகரமாக அமையும், அப்படி ஒரு லாபத்தை இரண்டு படங்களும் பெற்று தருமா என வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்ப்போம்...!

மூலக்கதை