எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் ஆட்டிசம் சிகிச்சை தொடக்கம்

தினகரன்  தினகரன்

சென்னை: எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் ஆட்டிசம் சிகிச்சையை  தொடங்கிவைத்தார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆட்டிசம் சிகிச்சைக்காக ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படுகிறது என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்படும் முதல் மனநல குறைபாடு ஆட்டிசம் எனவும், ஆட்டிசம் குறைபாடுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்க முதல்வர் காப்பீட்டு திட்டம் வழிவகை செய்கிறது என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மூலக்கதை