திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சமந்தா

தினமலர்  தினமலர்
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சமந்தா

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வரும் சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் சில காரணங்களால் திருமண தேதிகள் மாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அக்டோபர் 6-ந்தேதி அவர்களது திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது திருமண தேதி முடிவானதை அடுத்து திருப்பதி கோயிலுக்கு குடும்பத்தாருடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் சமந்தா.

மூலக்கதை