டூயட் பாடலுக்காக வெளிநாடு செல்லும் விக்ரம்- தமன்னா

தினமலர்  தினமலர்
டூயட் பாடலுக்காக வெளிநாடு செல்லும் விக்ரம் தமன்னா

சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்துவிட்ட தமன்னா, தற்போது விக்ரமுடன் ஸ்கெட்ச் படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு ஹீரோக்களுடனும் இப்போதுதான் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் தமன்னா. மேலும், சிம்பு படத்தில் ஸ்ரேயா உள்ளிட்ட வேறு சில நாயகிகள் இருந்தபோதும், விக்ரம் படத்தில் தமன்னா சிங்கிள் நாயகியாக நடித்திருக்கிறார். அதுவும் கவர்ச்சி நாயகியான அவர் இந்த படத்தில் ஹோம்லியான ரோலில் நடித்துள்ளார்.

மேலும், பைக் திருடனான விக்ரமின் காதலியாக நடித்திருக்கும் அவர், இதுவரை அவருடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து வந்தார். அந்த காட்சிகள் அனைத்துமே பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டு வந்தது. அடுத்தப்படியாக டூயட் பாடலுக்காக சென்னையிலுள்ள பின்னி மில்லில் செட் போட்டனர். ஆனால் இப்போது அந்த செட்டில் விக்ரம், டங்காமாரி ரேஞ்சுக்கு ஆடிப்பாடும் ஒரு குத்துப்பட்டை படமாக்கப்போகிறார்களாம். அதனால், விக்ரம்-தமன்னாவின் டூயட் பாடலை வெளிநாடு சென்று படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

மூலக்கதை