மேரி பியாரி பிரைம் மினிஸ்டர் படத்தை ஆரம்பித்தார் ராகேஷ் ஓம்பிரகாஷ்

தினமலர்  தினமலர்
மேரி பியாரி பிரைம் மினிஸ்டர் படத்தை ஆரம்பித்தார் ராகேஷ் ஓம்பிரகாஷ்

மிர்ஷியா படத்தின் தோல்விக்கு பிறகு இயக்குநர் ஓம்பிரகாஷ் மெகரா இயக்க இருக்கும் படம் மேரி பியாரி பிரைம் மினிஸ்டர். குடிசைப்பகுதியில் வாழும் நான்கு சிறுவர்களை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. நான் குழந்தைகளின் நட்பு, சோகம், ஏக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இப்படம் பேச இருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்தார் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ்.

இதுகுறித்து இயக்குநர் ராகேஷ் கூறியதாவது... "எனது முந்தைய படம் முழுக்க முழுக்க வடக்கில் படமாக்கப்பட்டது. கடந்த 1988-ம் ஆண்டு முதல் நான், மும்பையில் வசித்து வருகிறேன். அப்போது இருந்த மும்பை இப்போது இல்லை. உலகளவுக்கு பேசப்படும் முக்கிய நகராக மும்பை மாறியுள்ளது. பல்வேறு அடுக்குமாடி கட்டடங்கள் உருவாகி விட்டன. ஆனாலும் இன்னும் மும்பையில் சேரி பகுதிகள் பல இருக்க தான் செய்கின்றன. இதைப்பற்றி படம் இயக்க வேண்டும் என்று நீண்டகாலமாகவே என் மனதில் ஒரு எண்ணம் இருந்தது. அதன்படி தற்போது இந்தப்படத்தை உருவாக்கி வருகிறேன்" என்றார்.

மூலக்கதை