மோகன்லால் பிறந்தநாள் கொண்டாட்ட சுவாரஸ்யங்கள்..!

தினமலர்  தினமலர்
மோகன்லால் பிறந்தநாள் கொண்டாட்ட சுவாரஸ்யங்கள்..!

நேற்று மோகன்லாலின் 57வது பிறந்தநாள்.. இந்த பிறந்தநாளை மோகன்லால் பஹ்ரைனில் கொண்டாடினாலும் இங்கே உள்ளூரிலும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் விதம்விதமாக கொண்டாடி அமர்க்களப்படுத்தி விட்டனர்.. மோகன்லாலின் நெருங்கிய நண்பர் ஒருவர் மோகன்லால் நடித்த படங்களில் அவரது கெட்டப்புகளை பொறித்த விதவிதமான கேக்குளை உருவாக்கி அசத்தியுள்ளார்.. இன்னொரு ரசிகர் அடுத்ததாக மோகன்லால் நடிக்கவுள்ள மகாபாரதம் படத்தில் அவரது கேரக்டரான பீமன் கதாயுதத்துடன் நிற்போது போன்று ஒரு கேக்கை வடிவமைத்திருந்தார்.

இன்னொரு பக்கம் கேரளாவில் மூவாட்டுப்புழாவில் உள்ள மோகன்லால் ரசிகர் மன்றத்தினர் மோகன்லால் பிறந்தநாள் கொண்டாட்டமாக சுமார் 25 வருடங்களுக்கு மோகன்லால் நடித்த 'ஸ்படிகம்' படத்தின் சிறப்பு காட்சியை திரையிட்டனர். இந்த காட்சிக்கு அந்தப்படத்தில் சிறுவயது மோகன்லாலாக நடித்து இப்போது இயக்குனரும் நடிகராகவும் மாறியுள்ள ரூபேஷ் பீதாம்பரனையும் அழைத்து கௌரவப்படுத்தியுள்ளனர்.

இங்கே மட்டுமல்லாமல் ஆந்திராவில் புதிதாக உருவாகியுள்ள மோகன்லாலின் ரசிகர்களும் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களும் இணைந்து மோகன்லாலின் சூப்பர்ஹிட் படமான 'சாகர் அலைஸ் ஜாக்கி' என்கிற படத்தை ஆந்திராவில் சிறப்பு காட்சியாக திரையிட்டு கொண்டாடியுள்ளனர் என்பது இன்னொரு ஹைலைட்.

மூலக்கதை