அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்படும் தேர்தல் பிரச்சாரம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்படும் தேர்தல் பிரச்சாரம்!!

இன்று 22ம்திகதி திங்கட்கிழமை, பிரான்சின் பாராளுமன்றத் தேர்தலிற்கான (élections législatives), அதிகாரபூர்வப் பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் உள்ளார்.
 
 
அனைத்துக் கட்சிகளும், முக்கியமாக பெரும் தோல்வியைச் சந்தித்துள்ள, குடியரசுக்கட்சியான Les Républicains மற்றும் சோசலிசக்கட்சியான parti socialiste ஆகியவை தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்கக் கடுமையான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இவர்களிற்குப் போட்டியாக, மரின் லூப்பனும் (FN) தனது படையணியைக் களமிறக்கி உள்ளார்.
 
பாராளுமன்றத் தேர்தலின் முதற்சுற்று எதிர்வரும் 11ம் திகதி ஜுன்மாதம் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

மூலக்கதை