இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்: டிரம்ப் கவலை

தினமலர்  தினமலர்
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்: டிரம்ப் கவலை

ரியாத்: அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவற்றை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.சவுதி அரேபியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், ரியாத் நகரில் நடந்த மாநாட்டில் பேசியதாவது:


உலகளவில் சில நாடுகளில் மட்டுமே பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடப்பது இல்லை. அமெரிக்காவில் செப்., 11ம் தேதி நடந்த தாக்குதல், பாஸ்டன் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல சம்பவங்கள் நடந்துள்ளன. ஐரோப்பிய நாடுகளிலும் இந்த பாதிப்பு உள்ளது. இதேபோல், ஆப்ரிக்கா, தென் ஆப்ரிக்கா, இந்தியா, ரஷ்யா, சீனா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் நடந்துள்ள பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் ஏராளமான அப்பாவிகள் இறந்துள்ளனர்.


அரபு நாடுகள், முஸ்லிம் நாடுகளில் தான் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இறந்தவர்களில், 95 சதவீதம் பேர் முஸ்லிம்கள் தான் என சில ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன. மனிதநேயம் , பாதுகாப்பு சீர்குலைப்பு குறித்து நாம் கவலைபட வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.


இவ்வாறு டிரம்ப் பேசினார்.

மூலக்கதை