தொழிற்சங்க அமைப்புக்களை சந்திக்கும் இம்மானுவல் மக்ரோன்!

PARIS TAMIL  PARIS TAMIL
தொழிற்சங்க அமைப்புக்களை சந்திக்கும் இம்மானுவல் மக்ரோன்!

நாளை செவ்வாய்க்கிழமை தொழிற்சங்க அமைப்புக்களை சந்திக்கிறார் புதிய ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன். 'தொழிலாளர் சட்டம் சீர்திருத்தம்' தொடர்பான பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் குறித்து உரையாக இம்மானுவல் மக்ரோன் முன்வரவேண்டும் என இரு தினங்களுக்கு முன்னர் தொழிற்சங்க தலைவர் Philippe Martinez மிக கோபமாக தெரிவித்திருந்தார். மனுவல் வால்ஸ் பிரதமராக இருந்த பொழுது கோரப்பட்டிருந்த தொழிலாளர் சட்ட சீர்திருத்தம், இதுவரை ஒரு முடிவுக்கு வரவில்லை!' என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையிலேயே இந்த முக்கிய சந்திப்பு இடமெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நாளை செவ்வாய்க்கிழமை இம்மானுவல் மக்ரோன், தொழிற்சங்க தலைவர்கள், தொழிலாளர்களை Elysée இல் சந்திக்கிக்கின்றார். மேலும் இம்மானுவல் மக்ரோன் இந்த நீண்ட கால பிரச்சனைக்கு இந்த கோடை காலத்துக்குள் ஒரு தீர்வை எட்ட இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

மூலக்கதை