தலித் வீட்டு உணவை தவிர்த்த விவகாரம்: பி.எஸ்.எடியூரப்பா மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

தினகரன்  தினகரன்

பெங்களூரு: கடந்த வெள்ளிக்கிழமை அன்று கர்நாடகா மாநில பாஜக தலைவரான பி.எஸ்.எடியூரப்பா மற்றும் கட்சி நிர்வாகிகள் தலித் இல்லத்திற்கு சென்றனர். அங்கு தலித் குடும்பத்தினர் தயாரித்து கொடுத்த உணவை உட்கொள்ளாமல், உணவகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட உணவை உட்கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடக மாநில பாஜக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா கடந்த வெள்ளிக்கிழமை துமாக்குரு மாவட்டத்தில் உள்ள தலித் ஒருவரின் வீட்டிற்கு சென்றார். அப்போது அவருக்கும் உடன் வந்த மற்ற கட்சி நிர்வாகிகளுக்கும் உணவு கொடுக்கப்பட்டது. ஆனால் எடியூரப்பா அந்த உணவை உட்கொள்ளாமல் உணவகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட உணவை உட்கொண்ட விவகாரம் தற்போது வெளியாகியுள்ளது. எடியூரப்பாவின் இந்த செயலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக கர்நாடகா மாநில பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மூலக்கதை