காஸ்டியூம் டிசைனர் சுந்தரி திவ்யாவுக்கு திருமணம்

தினமலர்  தினமலர்
காஸ்டியூம் டிசைனர் சுந்தரி திவ்யாவுக்கு திருமணம்

தமிழ் சினிமாவில் காஸ்டியூம் டிசைனராக இருப்பவர் சுந்தரி திவ்யா. ஓம் சாந்தி ஓம், சவாலே சமாளி, அட்டு உள்பட பல படங்களில் பணியாற்றி உள்ளார். தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் என்ற படத்தின் மூலம் நடிகையாகவும் அறிமுகமானார்.

திவ்யாவின் தந்தையும் ஒரு இயக்குனர் ஊழியன் என்ற படத்தை இயக்கி உள்ளார். நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் திவ்வாவிற்கு சித்தப்பா. ஜோக்கர் படத்தில் நடித்த ரம்யா பாண்டியனின் சகோதரிதான் திவ்யா.

தற்போது ரம்யாவுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. தொழில் அதிபர் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். வருகிற ஜுன் 1ந் தேதி சென்னையில் திருமணம் நடக்க இருக்கிறது.

மூலக்கதை