மீண்டும் ஏவுகணை சோதனை : வடகொரியா அடாவடி

தினமலர்  தினமலர்
மீண்டும் ஏவுகணை சோதனை : வடகொரியா அடாவடி

சியோல்: உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது.

கிழக்காசிய நாடான வடகொரியா, அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதையடுத்து, அந்நாட்டின் மீது, ஐ.நா., பொருளாதார தடை விதித்துள்ளது.
இருப்பினும், சில தினங்களுக்கு முன், வடகொரியா, 700 கிலோ மீட்டர் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை சோதனை செய்தது. இதற்கு ஐ.நா., பாதுகாப்பு சபை கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், அந்நாடு நேற்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது. அணு ஆயுதங்களை ஏந்தி செல்ல, தாக்க, இந்த ஏவுகணை, 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை குறி பார்த்து தாக்கும் திறன் கொண்டது.

வடகொரியா ஏவுகணை சோதனை செய்துள்ளதை, தென்கொரியா ராணுவம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து, அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் கூறியதாவது: வடகொரியா, ரகசியமாக ஏவுகணை சோதனைசெய்ததை, நாங்கள் உறுதி செய்துள்ளோம். இது, குறிப்பிட்ட இலக்கை சரியாக தாக்குவதுடன், அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் திறன் கொண்ட நவீன ரக ஏவுகணை. வடகொரியாவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்; எங்கள் ராணுவம் எப்போதும் தயார் நிலையில் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை