கடும் வறட்சியில் பயிர்கள் கருகியதால் 3 விவசாயிகள் தற்கொலை

தினகரன்  தினகரன்

திருமலை: ஆந்திராவில் கடும் வறட்சி காரணமாக 3 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டனர். கடப்பா மாவட்டம் வேணுலகிராமத்தை சேர்ந்தவர் ஓபய்யா(64), விவசாயி. இவருக்கு சொந்தமான 69 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வதற்காக 15 லட்சம் கடன்பெற்று பயிரிட்டார். ஆனால் போதிய மழை மற்றும் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியது. இதனால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிக்குள்ளானார். இதையடுத்து 4.39 ஏக்கர் நிலத்தை விற்று மகளுக்கு திருமணம் செய்து வைத்ததோடு 5 லட்சம் கடனை அடைத்தார். மேலும் பருத்தி பயிரிட்டிருந்தார். அதிலும் நஷ்டமடைந்ததால் அவர் மனமுடைந்து ேநற்று முன்தினம் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து புலிவேந்துலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல் அந்தப்பூர் மாவட்டம் தாடிபத்திரி பெத்தவடுகூறு மண்டலம் காசிசப்னா கிராமத்தை சேர்ந்தவர் புல்லாரெட்டி(45), விவசாயி. இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் உட்பட மேலும் 15 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பருத்தி மற்றும் வேர்க்கடலை பயிரிட்டிருந்தார். 25 டன் பருத்தி அறுவடை செய்த நிலையில் 6 ஏக்கர் வேர்க்கடலை பயிர்கள் கடும் வறட்சி காரணமாக காய்ந்தது. இதில் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த புல்லாரெட்டி மனமுடைந்து நேற்று தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பெத்தவடுகூறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் கர்னூர் மாவட்டம் தேவரகொண்டா மண்டலம் கரடிகொண்டா கிராமத்தை சேர்ந்தவர் மத்திபஜாரி(36), விவசாயி. இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் 1.50 லட்சம் கடன் பெற்று பருத்தி பயிரிட்டிருந்தார். ஆனால் வறட்சி காரணமாக பயிர்கள் கருகியது. தண்ணீருக்காக 3 போர்வெல் அமைத்தும் அதில் தண்ணீர் வரவில்லை. இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேவரகொண்டா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை