ஐந்தாம் வட்டாரத்தில் பெரும் தீ விபத்து!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஐந்தாம் வட்டாரத்தில் பெரும் தீ விபத்து!!

இன்று ஞாயிற்றுக்கிழமை பரிசின் ஐந்தாம் வட்டாரத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 
 
பரிசின் ஐந்தாம் வட்டாரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தீவிபத்து ஏற்பட்டு ஏற்பட்டுள்ளது. Rue de l'Abbé-de-l'Epée  வீதியில் உள்ள ஆறு மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் நான்காவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  தீவிபத்தின் காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. உடனடியாக சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மூன்று மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. மேலும் விபத்தின் போது நபர் ஒருவர் இலேசான காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, புகை மூட்டம் அப்பகுதியினை முற்றாக ஆக்கிரமித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 
 
தீ பரவியதும் கட்டிடத்தில் இருந்த அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். நான்கு மணி நேரங்களுக்கு பின்னர் இயல்புக்கு திரும்பியது.

மூலக்கதை