பிரெஞ்சு மக்களின் மனங்களை வென்ற ஜனாதிபதியும் பிரதமரும்..!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரெஞ்சு மக்களின் மனங்களை வென்ற ஜனாதிபதியும் பிரதமரும்..!

பிரெஞ்சு மக்களிடம் புதிய ஜனாதிபதி, மற்றும் பிரதமரின் சேவைகளின் திருப்தி குறித்த கருத்துக்கணிப்பு ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ளது. 
 
Ifop நிறுவனம் எடுத்திருந்த இந்த கருத்துக்கணிப்பில், பிரெஞ்சு மக்களிடன் புதிய ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் 62 வீத சேவை திருப்தியும், பிரான்சின் புதிய பிரதமர் Edouard Philippe 55% வீத செவை திருப்தியும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  'நீங்கள் புதிய ஜனாதிபதியின் ஆட்சியில் திருப்தி படுகிறீர்களா?' என கேட்கப்பட்ட கேள்விக்கு, 12 வீத பிரெஞ்சு மக்கள் 'மிகவும் திருப்தி' என பதிலளித்துள்ளார்கள். மேலும் 50 வீதமான மக்கள் 'திருப்தி' என தெரிவித்துள்ளார்கள். மொத்தமாக 62 வீதமான மக்களுக்கு இந்த புதிய ஆட்சி திருப்தி எனவும்,  மேலும் 20 வீதமான மக்கள் 'பிடிக்கவில்லை' எனவும், 11 வீதமான மக்கள் மிகவும் அதிருப்தி எனவும் தெரிவித்துள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. 
 
தவிர முன்னாள் ஜனாதிபதி Francois Hollande கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதத்தில், 61 வீத செல்வாக்கும், 2007 ஆம் மே மாதத்தில் Nicolas Sarkozy 65 வீத செல்வாக்குடனும், 2002 ஆம் ஆண்டில் Jacques Chirac 59 வீத செல்வாக்குடனும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
மேலும், இம்மானுவல் மக்ரோன் 2007 ஆம் ஆண்டு நிக்கோலா சர்கோசியை பெற்றிருந்த செல்வாக்கை விட குறைவாக பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை