பாக்., ராணுவத்தையும், அரசையும் ஒன்று சேர்க்கும் குல்பூஷண் ஜாதவ்

தினமலர்  தினமலர்
பாக்., ராணுவத்தையும், அரசையும் ஒன்று சேர்க்கும் குல்பூஷண் ஜாதவ்

இஸ்லாமாபாத்: இந்தியர் குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச கோர்ட்டில் இந்தியா தொடர்ந்த வழக்கை சந்திக்க , பாகிஸ்தான் அரசுடன் இணைந்து செயல்பட பாகிஸ்தான் ராணுவம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த குல்பூஷண் ஜாதவ் உளவுபார்த்ததாக பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இந்தியா தொடர்ந்த வழக்கை விசாரித்த தி ஹேக்நகரில் உள்ள சர்வதேச கோர்ட் ஜாதவ் மரண தண்டனைக்கு தடை விதித்தது. இதனையடுத்து நவாஸ் ஷெரீப் அரசு மீது பலத்த விமர்சனம் எழுந்துள்ளது. இதனை ஏற்க முடியாது என அந்நாட்டு தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் பார்லிமென்ட் சபாநாயகர் சர்தார் அயாஜ் சாதிக் கூறியதாவது: ஜாதவ் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை பாகிஸ்தான் அரசுடன் இணைந்து ராணுவமும் எதிர்கொள்ளும். இந்த விவகாரத்தில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அரசியலாக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை