சவுதியில் வாள் நடனமாடிய டிரம்ப்

தினமலர்  தினமலர்
சவுதியில் வாள் நடனமாடிய டிரம்ப்

ரியாத்: சவுதியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வாள் பிடித்து நடனமாடினார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப், முதல் வெளிநாட்டு பயணமாக சவுதி சென்றுள்ளார். அவருடன், அவரது மனைவி மெலினா, மகள், இவாங்கா, அவரது கணவர், ஆகியோர் உடன் வந்துள்ளனர். சவுதியில் உள்ள முராபா மாளிகையில் நடந்த பாரம்பரிய வாள் நடனத்தில் அதிபர் டிரம்ப்பும், வாள் பிடித்து நடனமாடினார். அதிபருடன், வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ், அமெரிக்க அதிகாரிகள் மற்றும் சவுதி அதிகாரிகளும் நடனமாடினர்.
சவுதி பயணத்திற்கு பின் டிரம்ப், வாடிகன், பெல்ஜியம் , இத்தாலிக்கும் செல்கிறார். நேட்டோ கூட்டத்திலும் கலந்து கொள்ள உள்ளார்.

மூலக்கதை