நவாஸ் ஷெரீப்புக்கு 7 நாள் கெடு

தினமலர்  தினமலர்
நவாஸ் ஷெரீப்புக்கு 7 நாள் கெடு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் , ஏழு நாட்களில் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு வழக்கறிஞர்கள் கெடு விதித்துள்ளனர்.

பனாமா சட்ட நிறுவனத்திடம் இருந்த ரகசிய ஆவணங்கள் வெளியானதே பனாமா பேப்பர்ஸ் என அழைக்கப்படுகிறது. இதில், நவாஸ்ஷெரீப் மற்றும் அவரது உறவினர்கள் பல கோடி ரூபாயை வெளிநாடுகளில் முதலீடு செய்தது அம்பலமானது. இதுதொடர்பான வழக்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் மற்றும் லாகூர் ஐகோர்ட் பார் அசோசியேஷனை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஒன்றாக இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், ' பாகிஸ்தான் பிரதமர் நவாஸ், மே 27 ம் தேதிக்குள் பதவி விலகி, நேர்மையான விசாரணை நடக்க வழிவகை செய்ய வேண்டும். இல்லாவிடில், நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்' என, கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை