அமெரிக்க பார்லி.,யில் சாட்சியம்: ஜேம்ஸ் காமே திடீர் முடிவு

தினமலர்  தினமலர்
அமெரிக்க பார்லி.,யில் சாட்சியம்: ஜேம்ஸ் காமே திடீர் முடிவு


வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக, ரஷ்ய அரசு செயல்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து, அமெரிக்க புலனாய்வு அமைப்பான, எப்.பி.ஐ.,யின் முன்னாள் இயக்குனர் ஜேம்ஸ் காமே, அந்நாட்டு பார்லிமென்டில் சாட்சியம் அளிக்க உள்ளார்.
அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப், ஜனவரியில் பதவியேற்றார். முன்னதாக, அதிபர் தேர்த லின் போது, டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக, ரஷ்ய அரசு, பல்வேறு முறைகேடுகளை செய்ததாக புகார்கள் எழுந்தன.
இது குறித்து விசாரித்து வந்த, எப்.பி.ஐ., தலைவர் ஜேம்ஸ் காமே, சமீபத்தில், பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
தனக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரித்ததால் தான், காமேயை பதவியில் இருந்து, டொனால்டு டிரம்ப் நீக்கியதாக சர்ச்சை நிலவி வருகிறது.
இந்நிலையில், அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக, ரஷ்ய அரசு செயல்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து, எப்.பி.ஐ., திரட்டிய தகவல் பற்றி, அமெரிக்க பார்லிமென்டின், செனட் சபையின் புலனாய்வு கமிட்டி முன், ஜேம்ஸ் காமே ஆஜராகி, சாட்சியம் அளிக்க உள்ளார்.
இது குறித்து, அந்த கமிட்டியின் தலைவர் ரிச்சர்டு பர் கூறுகையில், ''காமேயின் சாட்சியம், பல கேள்விகளுக்கு விடை அளிக்கும். அமெரிக்க மக்களின்
சந்தேகங்களை போக்கு வதற்கு வாய்ப்பாக அமையும்,'' என்றார்.

மூலக்கதை