ரான்சம்வேர் வைரஸ்: பரவாமல் தடுக்க ரஷ்யா அரசு விஷேச பூஜை

தினமலர்  தினமலர்
ரான்சம்வேர் வைரஸ்: பரவாமல் தடுக்க ரஷ்யா அரசு விஷேச பூஜை

மாஸ்கோ: உலகை அச்சுறுத்தும் ரான்சம்வேர் எனப்படும் கம்ப்யூட்டர் வைரஸ்கள் தாக்குதல் தங்கள் நாட்டிலும் பரவாமல் இருக்க ரஷ்யா அரசு மத குருக்களை வைத்து கம்ப்யூட்டர்களுக்கு புனித நீர் தெளிக்க வைத்தது.

ரான்சம்வேர் எனப்படும் கம்ப்யூட்டர் வைரஸ் இந்தியா உள்ளிட்ட150 நாடுகளில் பரவி 2 லட்சம் கம்ப்யூட்டர்களை தாக்கியது. இதில் ரஷ்யாவையும் தாக்கியதால் அந்நாடு நூதன முறையில் பூஜைகள் செய்தது. அதன்படி மதகுருமார்களை வரவழைத்தது. ஆர்தடோடக்ஸ் சர்ச்சை சேர்ந்த குருமார்கள் ரஷ்யா உள்துறை அமைச்சக அலுவலகம் சென்று அந்நாட்டு கலாச்சாரப்படி சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் கம்ப்யூட்டர் மீது புனித நீரை தெளித்தனர். புனித நீர் தெளித்த புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.அவ்வாறு செய்வதால் ரான்சம்வேர் வைரஸ் மேலும் பரவாது என்பது அவர்களது ஐதீகம் என நம்புகின்றனர்.


மூலக்கதை