சோம்ப்ஸ் எலிசே தாக்குதல் - பயங்கரவாதி சிறையில் அடைப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
சோம்ப்ஸ் எலிசே தாக்குதல்  பயங்கரவாதி சிறையில் அடைப்பு!!

சற்றுமுன் சோம்ப்ஸ் எலிசே தாக்குதலில் தொடர்புடைய நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
மேலதிக செய்திகள் பின்னர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி, சோம்ப்ஸ் எலிசே பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த Xavier Jugelé எனும் அதிகாரியை பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொன்றிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து பயங்கரவாதியும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தான். பின்னர் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், பல்வேறு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையிலேயே, இன்று இத்தகவல் வெளியாகியுள்ளது. பயங்கரவாதி பயன்படுத்தியிருந்த துப்பாக்கியில் கிடைக்கப்பெற்ற DNA (உடல்கூற்று பரிசோதனை) உடன் தொடர்புடைய நபரே கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
உயிரிழந்த காவல்துறை அதிகாரிக்கு புதிய ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் பிரதமர் Gérard Collomb ஆகியோர் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை