காவல்துறை அதிகாரிக்கு அஞ்சலி செலுத்திய உள்துறை அமைச்சர்!!

PARIS TAMIL  PARIS TAMIL
காவல்துறை அதிகாரிக்கு அஞ்சலி செலுத்திய உள்துறை அமைச்சர்!!

பிரான்சின் புதிய உள்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள Gérard Collomb, தனது முதல் கடமையாக பயங்கரவாதியின் தாக்குதலில் உயிரிழந்த காவல்துறை அதிகாரிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். 
 
கடந்த புதன்கிழமை பதவியேற்ற உள்துறை அமைச்சர், பின்பு  Yvelines இல் உள்ள ஜோந்தாமினர்களின் தலைமை அலுவலகத்தில் வீரர்களை சந்தித்தார். அதைத் தொடர்ந்து, சோம்ப்ஸ் எலிசேக்கு பயணமானார். கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி பயங்கரவாதியின் தாக்குதலில் உயிரிழந்த காவல்துறை அதிகாரி Xavier Jugelé க்கு பூங்கொத்துக்கள் வைத்து அஞ்சலிகளை செலுத்தினார். 'நான் வீரர்கள் பக்கம் நிற்கின்றேன். எங்களது வீரர்கள் பிரான்சை பாதுகாக்க உயிரிழக்கவும் தயாராக இருக்கிறார்கள்.' என தெரிவித்துள்ளார். 
 
தவிர, புதிதாக 7,500 காவல்துறையினர்களும், 2,500 ஜோந்தாமினர்களும் பணியமர்த்த உள்ளதாகவும் உள்துறை அமைச்சர் Gérard Collomb குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆட்சியின் போது, காவல்துறையினருக்காக 250 மில்லன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தது.

மூலக்கதை