ஆபிரிக்க நாடுகளில் பிரான்சின் நடவடிக்கைகள் தொடரும் - ஜனாதிபதி மக்ரோன்

PARIS TAMIL  PARIS TAMIL
ஆபிரிக்க நாடுகளில் பிரான்சின் நடவடிக்கைகள் தொடரும்  ஜனாதிபதி மக்ரோன்

'மாலி உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளில் பிரான்ஸ் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்' என ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று  மலி நாட்டுக்கு சென்று, மாலி நாட்டின் ஜனாதிபயை சந்தித்துள்ளார்.  ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது இராணுவ பயணம் இதுவாகும். 
 
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் ஐரோப்பா தாண்டிய முதல் பயணமும் இது ஆகும். மாலி நாட்டின் Gao நகருக்குச் சென்றிருந்த ஜனாதிபதி, மாலி நாட்டின் அதிபர் Ibrahim Boubacar Keïta ஐ சந்தித்து உரையாடினார். தொடர்ந்து, அங்கு பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் புரியும் பிரெஞ்சு இராணுவத்தினரை சந்தித்துள்ளார். இம்மானுவல் மக்ரோனுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஊடகத்துறையினரும், இராணுவ அமைச்சர், ஐரோப்பாவின் அமைச்சர் வெளிநாடு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரும் பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சந்திப்பை முடித்துக்கொண்டு இன்னும் சில நிமிடங்களில் பிரான்சுக்கு திரும்புகிறார். 
 
இம்மானுவல் மக்ரோனுடன் பிரான்சை சேர்ந்த 25 ஊடகவியலாளர்களுக்கும், சில குறிப்பிட்ட மாலி நாட்டின் ஊடகவியலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 
 
பதவியேற்ற அன்று, இம்மானுவல் மக்ரோன் இராணுவத்தினரின் வாகனத்தில் சோம்ப்ஸ் எலிசேயில் உள்ள பெயர் தெரியா இராணுவ வீரர் கல்லறைக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை