மெத்தனமான அரசு! - புதிய ஆட்சி குறித்து மரீன் லூ பென்!

PARIS TAMIL  PARIS TAMIL
மெத்தனமான அரசு!  புதிய ஆட்சி குறித்து மரீன் லூ பென்!

ஜனாதிபதி தேர்தலின் பின்னர், நீண்ட நாட்களாக அமைதியாக இருந்த தேசிய முன்னணி கட்சி தலைவர் மரீன் லூ பென், முதன் முறையாக நேற்று வியாழக்கிழமை பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். 
 
சட்ட மன்ற தேர்தல் குறித்து மரீன் லூ பென் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பதால், ஜனாதிபதி தேர்தலின் முடிவு உங்களை வெகுவாக பாதித்துள்ளதா.. என கேட்கப்பட்ட வேள்விக்கு 'இல்லை. எனக்கு எவ்வித தயக்கங்களும் இல்லை. நான் சட்டமன்ற தேர்தலில் Hénin-Beaumont (Pas-de-Calais) தொகுதியில் போட்டியிடுகிறேன்' என தெரிவித்துள்ளார். தவிர 'இம்மானுவல் மக்ரோன் தலைமையிலான புதிய அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. மிக மெத்தனமாக நடந்துகொள்ளும் ஆட்சியாக இது உள்ளது. பிரெஞ்சு மக்களுக்கு எவ்வித பாதுகாப்பை உறுதிசெய்யவும் அவர்கள் தயாராக இல்லை!' என தெரிவித்துள்ளார். 
 
சட்டமன்ற தேர்தல் ஜூன் 11 மற்றும் 18 ஆகிய திகதிகளில் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை