சாம்பியன் டிராபியில் பாகிஸ்தானை இந்தியா எளிதில் வெல்லும்: கபில்தேவ் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சாம்பியன் டிராபியில் பாகிஸ்தானை இந்தியா எளிதில் வெல்லும்: கபில்தேவ் பேட்டி

மும்பை: சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வரும் 1ம் தேதி தொடங்குகிறது. இதுபற்றி  இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ்அளித்துள்ள பேட்டி: விராட் கோஹ்லியின் பார்ம் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

சாம்பியன் டிராபியில் அவர் பார்முக்கு திரும்புவார். டோனியை 4வது இடத்தில் களம் இறக்க வேண்டும்.

அவர் தற்போது அனுபவம் வாய்ந்த வீரர். 8 ஆண்டுக்கு முன் இருந்த டோனியை இப்போது பார்க்க முடியாது.

அவரது செயல்திறன் அணுகுமுறை முதிர்ச்சி அடைந்துள்ளது.

அவரை சரியான இடத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

டோனி 4வது இடத்தில் களம் இறங்கும் பட்சத்தில் யுவராஜ் சிங் 5வது வீரராக விளையாட வேண்டும். சாம்பியன் டிராபி தொடரில், பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றியுடன் இந்தியா தொடங்கும்.

ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பாகிஸ்தான் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலையில் தான் உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறுவது கடினம். இவ்வாறு அவர் கூறினார்.


.

மூலக்கதை