முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: வங்கதேசத்தை வீழ்த்தி நியூசிலாந்து அபாரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: வங்கதேசத்தை வீழ்த்தி நியூசிலாந்து அபாரம்

டப்ளின்: அயர்லாந்து, வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 3வது லீக் போட்டியில் வங்கதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதின.

முதலில் பேட்டிங்செய்த வங்கதேச அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழந்து 257 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சவுமியா சர்கார் 61, முஷ்பிகுர் ரஹிம் 55, முகமதுல்லா 51 ரன் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் பென்னட்  3, நிஷாம், சோதி தலா 2 விக்கெட் எடுத்தனர்.  

இதையடுத்து 258 ரன் இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 47. 3 ஓவரில் 6 விக்கெட் இழந்து இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக கேப்டன் லதாம் 54, நிஷாம் 52, புரூம் 48 ரன் அடித்தனர். வங்கதேச தரப்பில் முஸ்தாபிஜூர் ரஹ்மான், ரூபல் உசேன் தலா 2 விக்கெட் எடுத்தனர்.


.

மூலக்கதை