சென்னையில் சில நாட்கள் விவேகம் படப்பிடிப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
சென்னையில் சில நாட்கள் விவேகம் படப்பிடிப்பு

 'சத்யஜோதி பிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் டி.ஜி.தியாகராஜன் பிரமாண்டமான முறையில் தயாரித்து, அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக பல்கேரியாவில் நடந்து வந்தது. அங்கு நடைபெற்று வந்த படப்பிடிப்பு இரண்டு தினங்களுக்கு முன் முடிவடைந்தது.

 
இதையடுத்து விவேகம் படக்குழுவினர் நேற்று சென்னை திரும்பியுள்ளனர். சென்னையில் நடைபெறும் காட்சிகல் சில இன்னும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. இன்னும் சில தினங்களில் அந்தக்காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இந்த படப்பிடிப்புடன் விவேகம் படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்து விடுமாம்!
 
ஆகஸ்ட் 10ஆம் தேதி 'விவேகம்' படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். விவேகம் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி 1 கோடிக்கும் மேலான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்தது. விரைவில் படத்தின் பாடல்களையும் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
 
'சிறுத்தை' சிவா இயக்கத்தில் 'விவேகம்' படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபுராய் முதலானோர் நடிக்க அனிருத் இசை அமைத்து வருகிறார்.
 

மூலக்கதை